கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

திங்கள், 26 ஜூன், 2017

ஹம்பி மரபு நடை


தமிழக மரபுசார் ஆர்வலர் சங்கம் சார்பில் 21 பேர் இவ்வருடம் கடந்த சூன் மாதம் 16, 17 மற்றும் 18 அன்று ஹம்பி (Hampi) சென்று வந்தோம். இதில் கலந்து கொண்டோர்:
திருவாளர்கள்
  1.   இராஜசேகர்
  2.   வித்யாலட்சுமி
  3.   முனைவர் நிரஞ்சனாதேவி
  4.   வேலுசாமி (எ) வேலுதரன் 
  5.   நெல்லை சொக்கர்
  6.   கல்யாணி
  7.   குழந்தை மனஸ்வினி
  8.   விஜய்
  9.   குகப்பிரியா
  10. அஜித்குமார்
  11. கார்த்திக்
  12. கௌதம்
  13. வர்ஷா
  14. சிந்தியா
  15. ரகுராம்
  16. இளங்கோவன்
  17. பாக்யலட்சுமி
  18. கிரீஷ்
  19. சதிஷ்
  20. மகேஷ்
  21. குணசேகர்

கிரீஷ், ஹம்பியில் தங்குவதற்கும் உணவிற்கும் பத்மா விடுதியில் ஏற்பாடு நல்லமுறையில் செய்திருந்தார். மூன்று நாட்கள் முக்கியமான இடங்களை பார்ப்பதற்கும் வண்டி மற்றும் குடிநீரும் செவ்வனே ஏற்பாடு செய்திருந்தார்.

ஏற்கனவே இடங்களை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தாலும், சிறு மாற்றங்களுடன் மூன்று நாட்களும் பார்த்தது பசுமையான நினைவுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 

ஹம்பி குறித்து சிறு விளக்கம்:
கர்நாடகா மாநிலத்தின் வடபகுதியில் பெல்லாரி மாவட்டத்தின் ஓஸ்பேட் தாலூகாவில் ஓஸ்பேட்டிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் ஆனைகுந்திக்கு எதிரே விஜயநகர பேரரசுவின் தலைநகராக சிருங்கேரி சாராதா பீடத்தின் 12வது பீடாதிபதியின், இராஜகுரு வித்யாரண்யரின் நினைவாக வித்யாரண்ய நகரம், வித்யாநகரம் என்றும் பின்னர் விஜய நகரம் எனவும் அழைக்கப்பட்டது. 
நகரில் கோயில்கள், கோட்டைகள், அரண்மனை, மாளிகைகள், கடைத்தெருக்கள், குளம், கிணறு என பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பல அழிந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியில் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை 26 சதுர கி.மீ சுற்றளவில் இருப்பதாக தெரிகிறது. கி.பி 1336 முதல் 1565 வரை மிக சிறப்பாக உயிர்ப்புடன் இருந்ததற்கான பண்பாட்டு அடையாளங்களை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகின்றன.
நகரைப்பற்றி காலஞ்சென்ற பன்மொழிப்புலவர் திரு கா.அப்பாதுரையார் எழுதிய தென்னாட்டு திலகங்கள் நூலில் விவரித்துள்ளதை படித்து பார்த்தால் அவ்விடங்களின் உயிர்ப்பு தெரியும் அந்த விவரனங்கள் இதோ:
ஏழு கோட்டைகள் கொண்டது, அரண்மனைக்கு பக்கத்தில் பெரிய கடைத்தெருக்கள் நான்கு காணப்பட்டன. ஒவ்வோரு தெருவின் தலைப்பிலும் பெரிய மேடையும் மக்கள் தங்க இடமும் அமைந்திருத்தன. துங்கபத்திரையாற்றில் பெரிய அணைக்கட்டு கட்டி நீர் சேர்க்கப்பட்டது. அத்தேக்கத்திலிருந்து நகரத்திற்கு நீர் கொண்டு வரப்பட்டது.
கடைத்தெருக்கள்: விலைமதிப்புமிக்க நவரத்தினங்கள், பொன்நகை, வெள்ளப்பாத்திரங்கள், உலோகப்பொருட்கள், பருத்தி, சீன பட்டாடைகள், தந்தம், மரம் பலவகை பொருட்கள், அகில், சந்தனம், குங்கிலீயம், மணப்பொருட்கள் இருந்தன. குழல், யாழ், வீணை, மத்தளம், இசைக்கருவிகளும், நெல், சோளம், வரகு, திணை, சாமை முதலிய கூலப்பொருட்களும், எள்நெய், தேங்காய்நெய், முத்துகொட்டை நெய் முதலியவையும், புத்தகங்கள், எழுதுவதற்கு பனையோலை, எழுத்தாணிகள் மற்றும் மல்லிகை, முல்லை, ரோஜா, இருவாட்சி முதலிய மலர்களைக்கொண்டு செய்யப்பட்ட பலவகை மணப்பொருட்கள் என கடைகளில் விற்கபட்டன.
அரண்மனையைச்சுற்றி அமைச்சர், பிரபுக்கள், மண்டலத்தலைவர்கள், படைத்தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், அவைப்புலவர்கள் வாழ்ந்த தெருக்கள் அமைந்திருந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடைபெற்றது. கொல்லர், கன்னார், தச்சர், தந்த வேலை செய்பவர், முத்துகோப்பவர், கல் இழைப்பவர் எனவும் நடன நாடக மகளிர், இசை ஆசிரியர், ஒவியக்கலைஞர்கள், பொது மகளிர் தெருக்கள், மாட மாளிகைகள் என பல்லாயிரகணக்கானோர் வாழ்ந்தனர்.
அரண்மனைக்குள் அரசர் மாளிகை, அரச மகளிர் மாளிகை, நடன மண்டபம், நாடக அரங்கு, இசை அரங்கு, செய்குளம், செய்குன்று வளமுற்ற பூந்தோட்டங்கள் என பொலிவுற்று இருந்தன. அரண்மனையில் இருந்த அறை சுவர்கள், மேற்கூரை, தூண்கள் அழகிய ஓவியம், வேலைப்பாடுடனும், தந்தத்தாலும் அமைக்கபட்டிருந்தன. தாமரை மலர்கள் அழகாக செதுக்கப்பட்டிருந்தன. பொன்கட்டிகள், பொன் தகடுகள், நவரத்தின குவியல்கள், விலைமதிப்புடைய நகைகள் முதலியன நிறைந்திருந்தன.

மூன்று நாள் நிகழ்வுகளையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளேன்.

முதல் நாள் - 16.06.2017
தங்கும் விடுதியிலிருந்து எப்போதும் பார்க்கும் காட்சியாக அருகில் உள்ள விருப்பாக்சா கோயிலுக்கு காலையில் சென்றோம். அக்கோயிலில் அப்பகுதியினரின் பாரம்பரிய திருமணம் நடந்து கொண்டிருத்து. அதன் காணொளி இதோ. 





















பின்னர் துங்கபத்திரை ஆற்றங்கரை சுற்றிப்பார்த்தபின் குழுவினரின் அறிமுகம் நடைபெற்றது. பிற்பகல் உணவிற்குபின்
வித்தாலாசாமி கோயிலில் கல்தேர், கடைத்தெரு, அரசர் கோயில் கடவுளர்க்கு காணிக்கை செலுத்தும் துலாபாரம், புஷ்கரணி என்ற குளம், குதிரை கொம்பு மண்டபம் (Kuduregombe Mandapa) பெரிய லட்சுமி நரசிம்மர் சிலை(உக்ர நரசிம்மர்), படவிலிங்கம் ஆகியவையும் பார்த்துவிட்டு திரும்பினோம்.

இரண்டாம் நாள் - 17.06.2017
விடியற்காலையில் மாதங்கா மலையில் உள்ள கோயிலுக்கும், அருகில் உள்ள கடேலகலு கணேசர் மண்டபம், சசிவேகலு கணேசர் மண்டபம், பார்த்தனர், காலை உணவுக்குபின்
  1.   கிருஷ்ணர் கோயில் – எதிரே மூடிய கல்தொட்டி, கடைத்தெரு      மண்டபங்கள்.
  2.   சண்டிகேசவரா கோயில், உடானா வீரபத்ரா கோயில்
  3.   பாதாள சிவன் கோயில் (பிரசன்ன விருப்பாஷா கோயில்)
  4.   அரச மகளிர் மாளிகை (அந்தப்புரம்) - (Zanana Enclosure) இவற்றின் உள்ளே தாமரை மகால் (Lotus Mahal), கண்காணிப்பு கோபுரம் (Watch Tower), குளம்.
  5.   யானை தங்குமிடம் – Elephant stable, பாதுகாவலர் தங்குமிடம் – (Guards House) இந்த இடத்தில் ஹம்பியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை காட்சிக்கு வைத்துள்ளனர். இடிந்து போன பார்சுவநாதர் கோயில், ரங்கா கோயில், சீரிங்காராத ஹேப்பகலு (Sringarada Hebbagilu).
  6.   கர்நாடக அரசின் தொல்லியல், மரபு மற்றும் அருங்காட்சியகத்துறையின் அருங்காட்சியகத்தில் சிற்பங்கள் மற்றும் படகாட்சிகள் பார்த்தோம். சிலர் புத்தகங்களும் வாங்கினர்.
  7.   ஹசாராமா கோயில் – (Hazarama Temple) இக்கோயில் வெளி சுவர் சுற்றிலும் கீழிருந்து மேலாக யானை, குதிரை, ஒட்டகம், போர் வீரர்கள், ஆடல் மகளிர், என சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளது. கோயிலில் உள்ளேயும் ராமர் கதை, லவ குசன் கதை சிற்பங்கள் உள்ளன.
  8.   அரச மாளிகை வளாகம் – (King’s Palace Enclosure) கல்கதவு, அரசரின் அவைக்கூடம் (Kings Auditorium), மகாநவமி திப்பா – (Mahanavami Dibba), அழகான படிகட்டு கிணறு (Stepped Tank), பாதாள அறை, அழிந்து போன மாளிகை அடித்தளங்கள்.
பிற்பகல் உணவுக்குப்பின்
  9.   கமலாபூரில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் அருக்காட்சியகம் மற்றும் மாலையில் 
  10. துங்கபத்தரா அணைக்கட்டு மற்றும் பூங்கா.

மூன்றாம் நாள் – 18.06.2017

காலையில் விருப்பாக்சா கோயிலின் எதிரே இருபக்கமும் அமைந்துள்ள கடைத்தெரு (Bazar) இதன் கடைசியில் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட நந்தி ஓர் அடுக்கு மண்டபம் கணகட்டி சமணர் கோயில் (Ganagiti Jain Temple), பீமன் வாயில் (Bhimas gate), மல்யவந்த ரகுநாதர் கோயில் (Malyavantha Raghunatha Temple) பட்டாபிராமர் கோயில் (Pattabhirama Temple), சரசுவதி கோயில் ஆகியவையும் பிற்பகல் எண்கோண குளியல் தொட்டி (Octogonal Water Pavilion) அமைந்துள்ள சுற்று மண்டபத்தில் உணவு அருந்தினோம். இறுதியாக சந்திரசேகரா கோயிலில் மகிழ்ச்சியான, எளிமையான பிரிவு விழாவில் நல்ல ஏற்பாடுகளை செய்திருந்த கிரீஷுக்கு, வந்திருந்த அனைவரும் கையொப்பமிட்ட புத்தகம் பரிசாக வழங்கி மகிழ்ந்தோம். கடைசியாக சென்னைக்கும், கோவைக்கும் புறப்பட வேண்டியவர்கள் பெல்லாரி பேருந்து நிலையம் வண்டியில் வந்து இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பினோம்.

----- நினைவுகளை பகிர்ந்து கொண்டது கி.இளங்கோவன், புதுச்சேரி.
Facebook: ilangovankrishnaraj

Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...