09-05-2025 எட்டாம் நாள்
18. கொழும்பு
மறுநாள் காலை நுவரேலியாவின் விடுதியிருந்து இயற்கை காட்சிகளை ரசித்து விட்டு அறைகளை
காலி செய்து விட்டு கீழே இறங்கினோம். கீழே உள்ள வரவேற்பு கூடத்திற்கு அருகில் இலங்கையின்
பாரம்பரிய திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று நடந்து கொண்டு இருந்தது. திருமண நிகழ்வை பார்த்து
விட்டு 160 கி.மீ தூரமுள்ள இறுதி மரபு நடை
ஊரான கொழும்புவிற்கு பயணமானோம். நுவரேலியாவின் மலையில் இந்தியாவில் உள்ள சின்மயா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட அனுமன் கோயிலை வரும் வழியில் பார்த்தோம். பின்னர் வழியில் பிற்பகல் உணவு அருந்திவிட்டு பேராதனை வழியாக இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தை மாலை 6 மணியளவில் வந்து சேர்ந்தோம்.
மாலை 6.00 மணியளவில் கொழும்பு நகரத்தில் உள்ள பொன்னம்பலேணேசுவரர் கோயிலுக்கு சென்றோம். கொழும்பில் வாழ்ந்த தமிழர்கள் முன்னெடுப்பில் கட்டப்பட்ட 150
ஆண்டு பழமையான கற்கோயிலாகும். கோயிலுக்கு அருகே கொச்சிகடே (கேரளா கொச்சியிலிருந்து வந்தவர்கள்) அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இத்தேவலாயத்திலும் வேறு நான்கு இடங்களிலும் 2019 ஆண்டு வெடிகுண்டி வீசபட்டு பலர் இறந்தனர் என்பதை வழிகாட்டி ருமேஷ் கூறினார். பின்னர் இரவு கொழும்பின் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்போது தாமரை கோபுரம் என்ற மிக உயரமான கோபுரத்தை பார்த்தோம். அதில் ஏறி கொழும்பு நகரை பார்ப்பதற்கு 20 டாலர் கட்டணம் என தெரிவித்தார் ரூமேஷ், அதில் ஏறி பார்க்க நேரமின்மையால்
செல்லவில்லை.
பின்னர் ஆப்பிரிகோ என்ற வணிக வளாகத்திற்கு சென்று இலங்கையின் புகழ் பெற்ற ராணி சோப், பிஸ்கட் மற்றும் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கினோம். இதன்பின் அனைவருக்கும் சோபியா என்ற 10 மாடி சொகுசு விடுதியில் 9வது மாடியில் இரவு தங்கினோம். கொழும்பின் கடற்கரை அருகே அமைந்துள்ள உயரமான கட்டிங்களை பார்க்கும் வகையில் அந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
10-05-2025 ஒன்பதாம் நாள்
19. கொழும்பு தேசிய நூதன சாலை
சோபியா சொகுசு விடுதியில் காலையில் எழுந்த பின்னர் உணவுக்கு பின் கொழும்பின் நகரத்தின் கடற்கரையோர காட்சிகள் 9வது மாடியில் இருந்து அனைவரும் கண்டு ரசித்தோம். கடற்கரைக்கு மிக அருகே கடற்கரையை ஒட்டி ரயில் செல்லும் அழகு, அதை ஒட்டியே வாகன சாலை மற்றும் மிக உயரமான கட்டிடங்கள் இந்நகரத்தை வெளிநாட்டு நகரத்தின் அம்சத்தை கொண்டுள்ளது. பின்னர் விடுதியை காலி செய்து விட்டு கொழும்பு தேசிய நூதன சாலை என்ற அருங்காட்சியகம் சென்றோம். இந்த அருங்காட்சியகம் இலங்கையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்கிய தொல் பொருட்களை காட்சிப்படுத்துள்ளனர். இங்குதான் திருக்கேத்திசுவரம், திருகோணசுவரம், பொலன்னறுவை சிவலாயம் கல்வெடுக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க புத்தர் சிலைகள், இந்து மதபரப்பாளர்கள் சிற்பங்கள், பாரம்பரிய கலை, ஒவியம், உடை, கொடிகள், போர் கருவிகள், காலனிய ஆட்சியாளர்களின் கல்வெட்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
![]() |
நெற்றிப் பட்டம் |
![]() |
தந்தத்தால் செய்யப்பட்டு பொருட்கள் |
![]() |
ராஜேந்திர சோழனின் (கி.பி.1024-1044) கல்வெட்டு |
![]() |
திருக்கேத்தீசுவர் தூண் கல்வெட்டு |
![]() |
அரேபிய கல்வெட்டு |
![]() |
ஒல்லந்தார் கல்வெட்டு (டச்சு) |
![]() |
Water colour painting by Andrew Nicholl. 1869 |
![]() |
சீப்பு, நகை பெட்டி |
நூதன சாலையை பார்த்த பின்னர் இலங்கை அரசின் பரிசு பொருள் வணிக வாளகத்திற்கு சென்றோம், அங்கு தேவைப்பட்டவர்கள் பரிசு பொருட்களை வாங்கிய பின்னர் மெட்ராஸ் உணவகத்தில் உணவு அருந்தினோம். இறுதியாக சென்னை திரும்புவதற்கு நீர்கொழும்பில் உள்ள கட்டுநாயக விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் கொழும்பு நகரத்தின் முக்கிய இடங்களான பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, அமெரிக்க, இந்திய வெளிநாட்டு தூதரகங்கள், துறைமுகம், அரச மைய அலுவலகங்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தோம். ரூமேஷிற்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்னை திரும்புவதற்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து இலங்கை நினைவலைகளோடு சென்னை திரும்பினோம்.
![]() |
இலங்கை பாராளுமன்றம் |