கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

புதன், 13 ஜனவரி, 2021

 திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம்.

தொல் ஓவியங்கள் மரபு நடை3  நாள்- 25-11-2018

    கடந்த 25-11-2018 அன்று தொல் ஓவியங்கள் என்ற தலைப்பின் கீழ்செத்தவரைஉடையார் நத்தம் மற்றும் பனமலை ஆகிய ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

செத்தவரை

    முதலில் செத்தவரை என்ற கிராமத்தின் மலையில் அமைந்துள்ள தொல் மாந்தர்கள் வாழ்ந்த வழித்தடம் அமைந்துள்ள ஓவியங்களை பார்க்கச் சென்றோம். காலை உணவு அருந்திய பின் சென்னை ஓவியக் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு சந்துரு என்ற சந்திரசேகர் அவர்கள் அடிப்படையாக ஓவியத்தையும், தொல் ஓவியங்கள் குறித்தும் வரைந்து காட்டி விளக்கினார். அவர் கூறியதாவது. இந்த பாறை ஓவியங்களை வரைந்தவர்களின் எண்ண ஒட்டம் என்னவாக இருக்கும், என்ன பார்த்தார்கள், என்ன வரைந்திருக்கிறார்கள், என்பதை யோசிக்க வேண்டும், உடற்கூறியியல் (Anatomy) விரிவான விளக்கச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. ஆலம்பாடியில் மாட்டின் உணவுப்பாதை குடலை வளைத்து வரைந்திருக்கிறார்கள். மாட்டின் உணவுப்பாதை நீளமானது அங்கு ஒரு செயல்பாடு நடைபெறுகிறது என்பதை உணர்த்த இப்படி வரைந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாறை ஒவியங்களை வரைந்தவர் ஒரு மொழி வைத்து வரைந்திருக்கிறார். ஆனால் நமக்குதான் அது தெரியாது. பாறை ஓவியங்கள் பார்க்கும் போது ஏதோ கோடுகள் படங்களை வரைந்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம், வரைந்தவர் என்ன பார்த்திருப்பார், என்ன வரைந்திருப்பார், இதை எதற்கு பொருத்தியிருப்பார் என்பதை யோசிக்க வேண்டும், செத்தவரை பாறை ஓவியத்தில் மீனுக்குக்கூட குடல் வரைந்திருப்பார்கள் புறத்தோற்றத்தில் உள்ள புள்ளிகளும் வரைந்திருப்பார்கள்.

ஒரு கருவி (Tool) அதன் செயல் முறையை மாற்றும், செயல் முறையில் அந்த கருவியின் நோக்கம் பயன் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வேலை நடக்கும் போது அதற்கு தகுந்தவாறு அதன் கருவியையும் செயல் முறையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம். தேவைக்காக பொருளையும் செயலையும் மாற்றிக்கொண்டே போகிறோம். அதே போல் பொருளுக்கான தேவை மாறுகிறது. கண்ணால் பார்க்கும் பொருள் போல் வரையும் போது அதைப்போன்று செய்யும் போது மாறி விடுகிறது. பார்க்கிற பொருள் எந்த ஊடகத்தில் மாற்றம் செய்கிறமோ அதற்கு தகுந்தவாறு வடிவம் மாறிக்கொண்டே வரும்,. நமக்கு தேவைக்கான பொருளாகவும் மாற்றுவோம். செத்தவரை மலையில் பாறை ஓவியம் இருக்கும் பாறையில் ஏறும்போது வரைய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு பொருளை வரையும் போது எங்கு எப்படி வரையப்போகிறோம் என்பது தீர்மானிப்படுகிறது, வெறும் மாடோ, மானோ மட்டுமே அதன் கருப்பொருள் அல்ல.

    பின்னர் அனைவரும் மலையில் ஏறிச் சென்றோம். சற்று கடினமான மலையேற்றமே. 

 

    மலைப்பாதையில் சரிவான பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ள இடத்தை தொல்லியல் துறையினர் இரும்பு கம்பி வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர். அந்த ஓவியங்கள் மிக அழகாக தெரிகின்றன, மேலும் சில உருவங்கள் சிவப்பு வண்ண கோடுகளால் வரையப்பட்டிருந்தது. அவற்றை அனைவரும் பார்த்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு பாறைக்கு சென்றோம் அங்கிருந்து சுற்றி ஊரை பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. அங்கு பாறையின் சென்னை ஓவியக் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை ஓவியக் கல்லூரியில் முன்னாள் முதல்வர் திரு சந்துரு என்ற சந்திரசேகர் அவர்களின் மாணவரும் அவரின் மருமகனுமான ஓவியர் ராமச்சந்திரன் அவர்கள் சிறு உரையாற்றினார், “இங்கிருந்து நாம் பார்க்கும் காட்சி 5000, 6000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு உணவாக பயன்படும் மான் போன்ற விலங்குகளை தூரத்தில் இருந்து பார்த்து வேட்டையாடி செல்ல வசதியாக இந்த இடம் இருந்ததுள்ளது, மேலும் இயற்கை சீற்றங்களான வெயில், மழை பிற விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் மலைக்குகை அவர்களுக்கு அரணாக பயன்பட்டது என விளக்கினார். பின்னர் அனைவரும் பாறை ஓவியங்களை பார்த்த பின் கீழே இறங்கி வந்தோம்.

    இறங்கி வந்தவுடன் ஓவியர் ராமச்சந்திரன் அவர்கள் இந்த தொல் ஓவியங்களைப் பற்றி அறிமுகமும், ஓவியங்களை பற்றிய விளக்கமும் அளித்தார் இந்த இடத்தின் அமைவிடத்தை பற்றியும் விளக்கினார்.  கிழக்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு அங்கமாக அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில், ஆறுகள் பிரியும் இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு தொல் மாந்தர்கள் வாழ்விடம் அமையப் பெற்றுள்ளது. இந்த ஓவியத்தின் காலவரை என்பது ஐயாயிரம் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னர் என கணக்கிடப்பட்டு 50,000 எனவும் காலக்கணக்கீடு செய்கின்றனர்,. தொல் மாந்த இனத் தடங்கள் உள்ள முக்கியமான பகுதி இது, கேஸ்பியன் மலை தொடங்கி தெற்கு வழிப் பாதையில் இந்த இடத்தில் இருக்கிறோம், வெறும் ஓவியம் மட்டும் அல்லாமல் குறியீடுகளும் கிடைத்துள்ளது. சிந்துவெளியில் கிடைத்தது போன்று அதை ஒத்த தொல் மாந்தர் ஓவியங்கள் இங்கு கிடைக்கிறது. மலை மேல் கூட தொல்மாந்தர் மறைந்தோர் புதைவிடம் உள்ளது. பெரும் சங்கிலி தொடரி பாதையில் ஒரு கன்னியில் இந்த இடம் உள்ளது. கைப்பதிப்புகள் உள்ளன. Prehistoric என்ற பெருங்கற்காலம் 50,000 ஆண்டுகள் முன் ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் கூட வேளாண்மை ஆரம்பமாகிவிட்டது. இந்த ஓவியங்களில் மான் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளது மனிதனின் உருவங்கள் கோடுகளாக வரையப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பழைய ஆதிமனிதர்கள் குழுவாக தான் இருப்பார்கள் தனி ஆள் என்பது இல்லை, அவர்கள் எதை சாப்பிட்டார்களோ, உணவாக பயன்படுத்தினார்களோ அதை வரைய தொடங்கியுள்ளனர் அது தங்களுக்கு விருப்பமாக இருந்ததால் மிக துள்ளியமாக வரைந்துள்ளனர் அந்த ஓவியங்களில் கைகளின் பதிவு என்பது தனி ஒருவரின் பதிவாக இருந்துள்ளது தன்னை வெளிப்படுத்த self identity காட்ட இதை பயன்படுத்தி உள்ளனர். இந்த செத்தவரை ஓவியம் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஆலம்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் ஒரு விலங்கின் உணவு செரிமான படம் வரையப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் பல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் இன்றைய பார்வையிலிருந்து இந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அறிவைப் பயன்படுத்தி மேட்டிமை ஆவதும் குழு ஒன்றினையும் போது வளமாக ஆவதும் வளர்ச்சி இல்லை, எப்போது கலை பிறக்கிறது என்றால் நினைவு கூறும் போது கலை பிறக்கிறது பல ஆயிரக்கணக்கான வருடங்களின் பதிவுகள் தான் இந்த பாறை ஓவியம்ஒரு ஓவியத்திலிருந்து மற்றொரு ஓவியத்திற்கு கால இடைவெளி இருந்தது அவை  சில ஆயிரம் ஆண்டுகள் கூட இருக்கலாம். வண்ணங்களும் ஓவியத்தின் வளர்ச்சியே என ஒவியர் ராமச்சந்திரன் பேசினார்

    பின் செத்தவரை ஊரிலிருந்து கிளம்பி சங்கராபுரம் அருகே உள்ள கீழ்வாலை தொல் மாந்தர் ஓவியம் உள்ள பாறை பகுதிக்கு பார்வையிட சென்றோம். பிற்பகல் நேரமாகிவிட்டதால் உணவு அருந்தி விட்டு ஓவியம் இருந்த ஒரு பாறையின் அருகே திரு பாலமுருகன் அவர்கள் இந்த இடம் பாறை உடைப்பு பகுதிகளாக மாறி தொல் ஓவியம் அழியும் நிலையில் இருந்ததுபல எதிர்ப்புகளுக்கு பின்னர் இதை தற்போது பாதுகாத்து வைத்துள்ளனர். ஓவியங்களில் பல சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விட்டன என கூறினார். இதன்பின் சற்று தொலைவில் உள்ள மற்றொரு பாறை ஓவியம் உள்ள இடத்திற்கு கரடுமுரடான பாதையின் வழியாக பாறைகளுக்கு இடையே நடந்து சென்று அங்குள்ள பாறை ஓவியங்களை பார்வையிட்டோம். பாறை இடுக்கில் சரிவாக படுத்துக்கொண்டு அந்த ஓவியங்களை வரைந்துள்ளனர். அங்கு பல வடிவங்களிலும் சில கோடுகள் போட்ட மனித உருவங்களும் இருந்தன இவற்றை அனைவரும் பார்வையிட்ட பின் அருகே உள்ள பாறையின் மீது அமர்ந்து ஓவியர் திரு சந்துரு அவர்கள் பாறை ஓவியத்தின சில அடிப்படை செய்திகளை விளக்கினார். 


 

    ஒவியர் சந்துரு அவர்கள் நீங்கள் என்னென்ன உருவங்கள் ஓவியங்களை பார்த்தீர்கள் என வினவினார்சிலர் சூரியன் போன்ற படம்படகுசிலர் கைகோர்த்து நிற்பதுஉடுக்கை என கூறினர்அதற்கு அவர் ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபாடு உண்டு பழங்கால மனிதர்களின் தலையில்கழுத்தில் உடலில் அணிகலன்கள்சில அலங்கார பொருட்கள் அணிந்திருப்பர்உடலில் உடையில்லாமல் கூட இருந்தாலும் இந்த அணிகலன்கள் ஓவியங்களில் இருக்கும் இதற்கு காரணம் ஆதிமனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் விலங்குகளை பிடிக்கும் போது அல்லது எப்போதும் விலங்குகள் கழுத்து பகுதி குரல்வலையை கவ்வி பிடிக்கும், ஆகையால் அப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு அணிகலன்களை அணிந்தனர் என்றார்ஓவியத்தின் அடிப்படையே மேடு பள்ளம்ஒளிஇருள் என்பதை காட்டும்ஓவியத்தின் மூன்று அடிப்படைகள் உருவம்வடிவம்அருவம். முகம் என்பது ஒரு வடிவம், அருவம் உணர்வை வெளிப்படுத்துவதுபசி என்பது ஒரு form of abstract அதாவது புலனாகாத ஒரு வடிவத்தை தெரிவிப்பதுஎப்போதும் வரையும் போதும் பார்க்கும் போது நமக்கு நேராகபக்கத்தில்பின்னால் என வரையறை செய்து கொள்வோம் ஆக வரைபவர் தான் நடுப்புள்ளி.

    2000 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை உருவம் என்பது வட்டம்சதுரம்முக்கோணம் ஆகியவற்றால் ஆனது என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்அனைத்து படங்களையும் வட்டத்தில் அடக்கி விடலாம்கால் பதிவுதப்பளம் என்ற கைப்பதிவு அடிப்படை ஓவியம்சேற்றிலோவண்ணத்திலோரத்தம் தோய்ந்த கையை பாறையில் அப்பி வைத்துள்ளவை ஆரம்பகால ஒவியங்கள்கையின் புற வளயங்களை வரைந்தது பெரிய கண்டுபிடிப்பாகும்.

 

பனை மரத்தில் இருக்கும் பண்ணாடை இயற்கை உருவாக்கிய தூரிகை அதன் கற்றையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து விட்டு வரைய ஆரம்பித்தது அதன் வளர்ச்சிஒசைக்கு கோடுகள்வடிவம் உருமாறி வந்து எழுத்தாக மாறியதுஎழுத்தின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பத்தின் காரணமாக மாறிக்கொண்டே இருக்கும்சிந்துவெளியின் எழுத்து வடிவம் போல் இங்கு கீழ்வாலையின் இருக்கிறதுஓவியத்தில் காணும் குறியீடுகள் இதுதான் என நிர்ணயிக்க அதன் ஆதார சான்றுகளை வைத்து பார்க்க வேண்டும் எனவும் ஒரு ஆய்வாளன் தன் முடிவின் மீது தெளிவாக நிலையாக இருக்க வேண்டும் எனவும் திரு சந்துரு கூறி முடித்தார்.

பனைமலை

    கீழ்வாலை ஓவியங்களை பார்த்து முடித்தப்பின்னர் மாலை 4.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் உடையார்நத்தம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும் செல்வது சிரமம் என்று அதை தவிர்த்துவிட்டு பனைமலை தாளகிரிசுவர் மலைக்கோவிலை பார்க்க சென்றோம்.

 

கோயிலை சுற்றிப் பார்த்து விட்டு கோயிலின் வெளி மண்டபத்தில் ஓவியர் திரு ராமச்சந்திரன் இதன் வரலாறும் ஓவியத்தின் விளக்கம்தத்துவ பரிமாணங்களை விரிவாக எடுத்து கூறினார். 

  

அதன் பதிவு

    பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மன் காலத்தில் (கி.பி.700-728) இந்த பனைமலை தாளகிரீசுவரர் கோயில் கட்டபட்டுள்ளதுஇதே காலத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில்காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியவையும் கட்டபட்டுள்ளனதெற்காசியவிற்கு கோயில் கட்டுமானத்திற்கு மிகவும் அடிப்படையானவை இந்த கோயில்கள்பல்லவர் காலத்தில் ஊர்கள் உருவாக்கும் போது நீர் நிலைகளையும் கோயில்களையும் கட்டுவது வழக்கம்பனைமலையில் உள்ள பெரிய ஏரி 1300 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதுசெஞ்சியிலிருந்து காஞ்சி செல்லும் ராஜபாட்டை வழியில் இந்த ஊர் அமைந்துள்ளதுஇந்த கோயில் கட்டுமானம் கற்களை ஒழுங்கில்லாமல் அரைகுறையாக கட்டப்பட்டு அதன் மீது சுண்ணம் பூசி ஒவியம் தீட்டப்பட்டுள்ளதுஇங்குள்ள யாளி சிற்பம் தவிர மற்றவையெல்லாம் வண்ணங்களால் தீட்டப்பட்டவைகருவறை லிங்கம் மிகவும் மெருகூட்டி நன்கு பளபளப்பாக்கபட்டுள்ளது இக்காலத்தில் இது போன்று செய்வது கடினம்.

    கோயிலின் வாசலில் உயரமாக கட்டுவது கோபுரம்கருவறையின் மீது கட்டுவது விமானம்விண் மானம் என்பது வழக்குச் சொல்மானம் என்றால் அளவுசிற்ப அளவுகோல்படி எல்லாம் அளவாக ஒவ்வொரு திசையிலும் செய்யபட்டுள்ளதுகோயிலின் சிறப்பு அமைப்பு இங்குள்ள கௌரி தாண்டவம் என்ற சந்தியா நடனமாகும்இந்த நடன ஒவியம் ராஜசிம்மன் காலத்தில் கட்டிய அனைத்து சிவலாயங்களிலும் இருக்கும்இதில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் காட்டபட்டுள்ளனஅவை சிவன் முயலகனை வதம் செய்வது அடுத்து கார்கோடகனுக்கு அடைக்கலம் தந்ததுஉமையம்மை இல்லாத நேரத்தில் இதைத் செய்ததால் கோபம் கொண்டாள் அதனால் மாலையில் இந்த நடனத்தை சிவன் நிகழ்த்தி காட்டினர்இதன் தத்துவம் யாதெனில் தவறு செய்தால் ஒடுக்குவதும்நல்லது செய்தால் ஆதரவும்பாதுகாப்பு அளிப்பதும் என உள் அர்த்தமாக விளக்கப்பட்டுள்ளதுசிவன் பாவ புண்ணியத்திற்கு பொறுப்பு ஏற்க மாட்டார்தீய வினைக்கு நீங்களே பொறுப்பு பரிகாரத்திற்கு இடம் இல்லை, இதுவே அடிப்படை தத்துவம்.

     சிற்ப கலைஞர்கள் சிற்பம் என சொல்லக்கூடாது, முழுவடிவம் தான் சிற்பம்தத்துவத்திற்கான ஒரு நிலையே சிலைசிற்பம் முழு காட்சி அல்ல, நடராஜர் சிலை மட்டுமே முழு காட்சிவைணவத்தில் அனந்தசயனம் முழு காட்சி. இதை தவிர்த்து இந்திய தத்துவத்தில் சிற்பம் கிடையாது மீதியெல்லாம் படிமங்களேசிவன் ஐந்தொழில்களை செய்பவர் காத்தல்அழித்தல்படைத்தல் இவை மூன்றும் லிங்கத்தின் வடிவம் மற்ற இரண்டு மறைத்தல்அருளல். இதில் நடராஜர் மட்டுமே ஐந்து மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவதால் அது சிற்பம்எந்த காலத்திலும் அனந்த சயனம் முழிப்பது இல்லைமுழித்தால் பிரலயம்இடது பக்கம் படுத்தால் செரித்துவிடும்வலது பக்கம் படுத்தால் பிரபஞ்சம் இயங்கி கொண்டே இருக்கும் இது தான் தாத்பரியம்தமிழ் வழக்கில் அவதாரங்களே கிடையாதுவேத மரபில் சொல்லப்படுகிறதுசிவாச்சாரியர்பட்டர் வேதாந்தி கிடையாதுவேதாந்திகள் ஈசுவர மரபை நாத்திகம் என்று சொல்கின்றனர்இந்தியா முழுவதும் எழுப்பப்பட்டசெதுக்கப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் வேதத்திற்கு எதிரானதுஇதை செய்த ஆட்கள் நாத்திகன் என சொல்லப்படுகிறவர்களால் செய்யப்பட்டதுவேத மரபில் ஒரு சிற்பத்தை செதுக்க முடியாதுவேத மரபில் படைப்பு என்பது கிடையாதுயக்ஞத்தில் யோகத்திற்கு இடம் கிடையாதுயோகத்தின் வடிவம் நடனம்.

    இந்த பனைமலை கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதுஇரண்டு அடுக்குகளால் சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளனஇந்த வண்ணம் தீட்டுவது என்பது 1000 ஆண்டு அனுபவத்தால் ஏற்பட்டவைபனைமலை கோயில் ஓவியங்களும், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்களும் ஒரே மாதிரியானவை.

    சங்க இலக்கியத்தில் அகத்திணையில் உள்ளனஅவை ஐந்திணை (முல்லைமருதம்குறிஞ்சிநெய்தல்பாலை), மீதி இரண்டு விலக்கபட்டவை அவை கைக்கிளைபெருந்திணைநாயன்மார்கள் கைக்கிளை வழிபாட்டு முறையை பின்பற்றினர்ராமலிங்க வள்ளலாரும் கைக்கிளையை பின்பற்றினார்கைக்கிளையிலிருந்து பெருந்திணை வருவது தான் நாயன்மார்களின் பக்தி வழிபாடும் இலக்கியமும்யோகத்தின் ஒவ்வொரு கூறும் இந்த வடிவங்கள்யோக சாரத்திலிருந்து 10 நிலையை அடைந்ததால் 10 தலை ராவணன் என சொல்லப்படுகிறது, உண்மையில் 10 தலை என்பது இது தான். சூர சம்மாரத்தில் ஒவ்வொரு தலையும் வெட்டுவது அகந்தையை வெட்டுவது ஆகும்ஆன்ம வீணையைத்தான் ராவணன் மீட்டுகிறார்வீணை யார் வாசிக்கிறார்களோ அவருக்கு ஏற்றவாறு வீணை செய்வார்கள்மற்றவருக்கு வீணையை கொடுக்கக்கூடாதுதமிழகம் முழுவதும் அகச்சேர் வாழ்க்கைக்கான கட்டுமானங்களை கொண்டுள்ளதுஅந்த காலத்து தமிழ் சமூகம் ராவணனை பெருமை பாராட்டவில்லைஅகந்தை என புறக்கணித்துவிட்டதுகட்டுமானத்தை மறுப்பது தமிழ் வழக்கு வெறுமனே கட்டுமானத்தை பார்த்து பிரமித்துவிட்டு  பெருமைப்பட்டு விடாதீர்கள்அதன் உள் தாத்பரியத்தின் மீது எழுந்த அகந்தையை மறுப்பது ஆகும்.

       பல்லவர்கள் கட்டிய எல்லாம் தத்துவாரத்த ரீதியாக கட்டியதுதான்ஆனால் ஏன் இன்று வீழ்ச்சி அடைந்தது என்றால் அதிகாரத்தின் மீது நிலை கொண்டதால் ஏற்பட்டதுஇவையெல்லாம் புதியதாக உருவாக்கியவைதிருவண்ணாமலைமதுரை ஆகியவை நிலைத்து நிற்க காரணம் ஏற்கனவே 3000, 4000 ஆண்டுளாக இருந்தவைகட்டுமானங்காளால் அல்ல தத்துவத்தால்எல்லா இடத்திலும் பூர்வீக இடத்தில் கட்டுமானம் தேவைப்படுகிறதுபுதிய ஊர்களை உருவாக்கி அங்கு தத்துவங்களை புகுத்தினர்அடுத்து அடுத்து வந்த மன்னர்கள் அதை கண்டு கொள்ளவில்லைதிருவண்ணாமலைதிருவரங்கம் அரசு தலைமையில்லாமல் நிலைத்து நிற்கிறது என்றால் அவை பூர்வாங்கமாகவே உள்ளவைகட்டுமானத்தை நம்பி மக்கள் போகவில்லைகட்டிடம் இல்லாவிட்டாலும் போவார்கள்.

    பங்குனி உத்திரம் ராஜேந்திரன் உருவாக்கியதுஅவருடைய கல்வெட்டு பனைமலையில் உள்ளதுஅனைத்து விதமான சடங்குகள்மதிப்பீடுகள்தாத்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பங்குனி உத்திரம் உருவாக்கப்பட்டதுஅனைத்து பிரிவினரும் கிருஷ்ணர் வரை கொண்டாடுவர்மதுரைதிருவண்ணாமலை பெரிய மரபுஆனால் அரசர்கள் இதையெல்லாம் சேர்த்து புதிய மரபை கொண்டு வந்ததால் குழப்பம் ஏற்படுகிறதுஅதை அரசு நிர்வாகம் ஒரே பண்பாடாக ஏற்றுக் கொள்கிறதுராஜேந்திரன் காலத்திற்கு முன் எங்குமே பங்குனி உத்திரம் செய்யப்படவில்லைகாஞ்சி கைலாசநாதர் கோயில் கருவறையில் சந்தியா நடன ஓவியம் உள்ளது அதில் ஏகன்அநேகன் என்ற தத்துவம் சொல்லப்படுகிறதுஒருவர் தன் தனித்தன்மை இழக்காமல்  அதற்குள் செல்ல வேண்டும்முனீசுவரனை கும்பிடுகிறானகவே இருஅதை அழித்துவிட்டு ஈசுவரனிடம் வந்துவிடு என்பது தான் முறை. கிருஸ்துவம்இசுலாமிற்கு மாறும் போது (மதம் மாறும் போதுவழக்கைவிட்டு (பழக்க வழக்கம்வழிபாடுஅனைத்தும்செல்ல வேண்டும்ஆனால் செய்யவில்லை அதனால்தான் காலனி ஆட்சி காலத்தில் வலிமையாக இருந்தவரை அதன் கோட்பாட்டால் சைவ வைணவத்தை மறுத்தவர்கள் தமிழர்கள்.

    அகம்பொருள் இவற்றில் பொருள் எதை சொல்கிறது என்றால் இறைவனை சொல்கிறதுதங்களுக்கு தேவையானதை எடுத்தக் கொண்டு பொருளில் சைவ வைணவத்தை வளர்த்துவிட்டார்கள். 12ஆம் நூற்றாண்டில் தான் இதை பதிப்பிகிறார்கள்நாயன்மார்கள்ஆழ்வார்கள் படைத்த களவியில் உரையைத்தான் பின்னால் எழுதும் போது இடைசெருகல் என நினைக்கிறார்கள்.

    அடிப்படையில் தமிழ் மரபில் கைக்கிளை பெருந்திணைதான் சைவவைணவ மரபு இவை என்றும் வேதத்தை ஒப்பக்கொண்டதில்லைவேத்திலிருந்து வரவில்லைஇதற்கு முன் யோகம் தான் இருந்தது.

    இவ்வாறு ஓவியர் ராமச்சந்திரன் பேசியபின் மரபு நடை இனிதே முடிந்து வீடு திரும்பினோம்.

🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...