வரலாற்றின் மீதுள்ள ஆர்வத்தினால் எட்டு ஆண்டுகளுக்கு முன் முனைவர் ஜெயசீல ஸ்டிபன் அவர்களின் Pondicherry Under the French என்ற ஆங்கில நூலை வாங்கி படித்து முடித்தவுடன் புதுச்சேரியின் வரலாற்றை ஆவணப் பதிவுகளின் ஆதாரங்களைக் கொண்டு 27 இயல்கள் 688 பக்கங்கள் கொண்ட பெரிய நூலை நம் புதுச்சேரி மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்று ஒரு இயலை மொழி பெயர்த்தேன். இதை வெளியிட முனைவர் ஜெயசீல ஸ்டிபன் அவர்களை சந்தித்து அனுமதி பெற வேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். புதுச்சேரி பல்கலை கழகத்தில் 02-03-2020 அன்று ஒரு கருத்தரங்கில் உரையாற்றிவிட்டு வரும் போது அவரை சந்தித்து மொழிபெயர்த்ததை பற்றி கூறினேன், மொழிபெயர்த்த இயலை அனுப்பும்படி கேட்டார். பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தார் ஏற்கனவே தமிழ் மக்கள் வரலாறு என்ற தொடர் நூல் வெளியிடலில் என் நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன, அதில் பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி என்ற தலைப்பு கொண்டு நூல் வெளியிட எண்ணியுள்ளதால் Pondicherry Under the French நூலில் உள்ள ஏழு இயலை என்னிடம் குறித்து கொடுத்து மொழிபெயர்க்கும்படி கூறினார். நானும் மொழிபெயர்த்து கொடுத்து அந்நூல் 2020 ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதுவும் குறிப்பாக பெருந்தொற்று கரோனா காலத்தில் அதிக நேரம் கிடைத்ததால் விரைந்து முடிக்க முடிந்தது. இது தான் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியான முதல் நூல். இதன் பின் ஸ்டிபன் அவர்கள் தொடர்ந்து அவர் எழுதிய வரலாற்று நூல்களை மொழிபெயர்த்து தருமாறு கேட்டுக் கொண்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் முழுமையாக மொழிபெயர்த்த 12 நூல்களும், இத்துடன் இரண்டு நூல்கள் திரு.சீனு.தமிழ்மணி அவர்களும் இணைந்து மொழிபெயர்த்து மொத்தம் 14 நூல்கள் வெளிவந்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நியூ செஞ்சுரி புத்தக ஹவுஸ் வெளியிட்ட நான் மொழிபெயர்த்து வெளியான 12 நூல்களின் பட்டியல்:
1. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை, 1674-1793, (Pondicherry under the French; Illuminating the urban landscape, 1674-1793) டிசம்பர், 2020, 168 பக்கங்கள், டிசம்பர், 2020, 168 பக்கங்கள்.
2. தமிழ் இலக்கியப் பயணம், 1543-1887: ஐரோப்பியர் மொழிபெயர்ப்புகளின் வழியே, பிப்ரவரி, 2021, 290 பக்கங்கள். 8. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மை நிலையும், சாதியும் (கி.பி.600-1565) (The Development of crafts in Tamil region and the social realities of the working class and caste) –அக்டோபர், 2021, 157 பக்கங்கள்.
3. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மை நிலையும், சாதியும் (கி.பி.600-1565) (The Development of crafts in Tamil region and the social realities of the working class and caste) –அக்டோபர், 2021, 157 பக்கங்கள்.
4. தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் (1621-1878) (Slaves, Castes, Lascars and contract Labourers in Tamil country, The European Commercial Expansion and Colonial Impact) – டிசம்பர், 2021, 195 பக்கங்கள்.
5. சிப்பாய்களும் போர்களும் தமிழகத்தில் காலனியமயமாக்கமும் அதன் சமூகத் தாக்கமும் (கி.பி.1565-1857) (Sepoys, Wars, the Social Impact and Colonial transition in Tamil Country, A.D 1564-1857) – அக்டோபர், 2022, 197 பக்கங்கள்.
6. தமிழ் நிலபரப்பில் நிகழ்ந்த தட்பவெட்ப நிலை மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள், மக்கள் பட்ட இன்னல்கள், (கி.பி.800-1900) (A History of Weather and Climate in Tamil Landscape and Environment, 9th to 19th Century) – மார்ச், 2023, 191 பக்கங்கள்.
7. அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கி.பி.1547-1792) (European Slave Trading in the Tamil coast and Traces of Colonialism, 1547-1792) – ஏப்ரல், 2023, 219 பக்கங்கள்.
8. தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் : அமைப்பு முறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்பு (Discovering caste: The System and Practice in Tamilnadu before 1871 British Census) – அக்டோபர், 2023, 236 பக்கங்கள்.
9. தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் : தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை, மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப் பரிமாணங்கள், 1567-1887. (Many shades of Education through Colonial connections: Tamil medium instruction and Western influence, 1567-1887), ஜூன், 2024, 238 பக்கங்கள்
10. தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் மலாயா, பர்மா, சுமத்தரா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மனியாவிற்கு ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்டதும் வாழ்கை நிலையும், 1787-1896. (The Deportation of tamil convicts to Benkulu, Penang, Melaka, Moulmein, Singapore, Australia and Tasmania under the British, 1787-1896) – ஜூலை, 2024, 108 பக்கங்கள்.
11. சென்னையிலிருந்து ஒப்பந்த தொழிலாளர் தமிழர்களின் கடற்பயணங்களும், மொரிஷியஸ், கயானா, டிரினாடாட், ஜமைக்கா, செயின்ட் லூசியா, செயின்ட் தீவு மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நத்தாலுக்கு புலம் பெயர்தலும் வாழ்வியலும், 1837—836, (The voyage and migrationof Tamil indenture labour from Madras to Maruitius, Guyana, Trinidad, Jamaica, St.Lucia, St.Vinvent Islands and Natal in South Africa, 1837-1896) – நவம்பர், 2024, 136 பக்கங்கள்
12. தமிழகத்தின் காலனியக் கட்டுமானத்தில் தேயிலை, காப்பிக் கொட்டை மற்றும் புகையிலை அறிமுகமும், வர்த்தகமும், பல வகையான மதுபானங்கள் வணிகமும் நுகர்வும், சமூகத்தின் சீரழிவும், 1545-1877 (A History of Liquor, Beverages & Intoxicants in Tamil Country, Commerce, Consumption and Colonial Culture) – பிப்ரவரி, 2025,158 பக்கங்கள்.
திரு.சீனு.தமிழ்மணி அவர்களும் சேர்ந்து மொழிபெயர்த்து வெளியான நூல்கள்:
13. அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும் (கி.பி.1547-1792) (European Slave Trading in the Tamil coast and Traces of Colonialism, 1547-1792) – ஏப்ரல், 2023, 220 பக்கங்கள்.
14. தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்: அமைப்பு முறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்பு (Discovering caste: The System and Practice in Tamilnadu before 1871 British Census) – அக்டோபர், 2023, 238 பக்கங்கள்.







புதுச்சேரி வரலாற்றுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் திரு ந.இராசசெல்வம் அவர்கள் என்னை சந்தித்து தமிழில் மொழிபெயர்த்த நூல்களைப் பற்றி அறிந்து அவர் ஆய்வு செய்து 2012 ஆண்டு வெளியிட்ட 'ஆனந்தரங்கப்பிள்ளையும் நாட்குறிப்பும்' என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரமுடியுமா என கேட்டார். ஏன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க கூடாது என ஏற்றுக்கொண்டு அதையும் செய்து முடித்து 'Anandaranga Pillai The First Diarist in Tamil' என்ற ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை புதுச்சேரி பல்கலை கழகத்தில் 30-03-2024 அன்று நடந்த ஆனந்தரங்கபிள்ளை பிறந்தநாள் கருத்தரங்கத்தில் இந்நூல் வெளியிட்டு, என்னையும் சிறப்பு செய்தார். இது நான் மொழிபெயர்த்து தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியான நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக