05-05-2025 நான்காம் நாள்
11. பொலன்னநுறுவை
இடைக்காலத்தில் 10, 11 நூற்றாண்டிலிருந்து 13
ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்த இந்த நகரம் அநுராதபுரத்திற்கு அடுத்த
உருவாக்கப்பட்ட நகரமாகும். முதலில் இங்கிருந்த அரும் பெரும் காட்சி
சாலை மற்றும் தகவல் நிலையத்தை பார்வையிட்டோம். இந்நகரத்தில்
இருந்த அனைத்து தொல் பொருட்கள் மற்றும் தகவல்களையும் அழகுற காட்சி படுத்தியுள்ளனர்.
காப்பரண்கள், புனித சதுக்கம், அட்டதாகே (எண்கோண மண்டபம்), வட்டதாகே
(வட்ட மண்டபம்), நிசங்க மண்டபம் (நிசங்க மன்னனால் கட்டப்பட்ட சதுர வடிவ மண்டபம்), கல்
புத்தகம், வேளக்கார கல்வெட்டு, அரசமர கோயில்,
கிரி விகாரை, கிரி விகாரையுடன் இணைந்த தூபி,
துறவிகளின் வீடு, துறவிகளின் வைத்திய சாலை,
குகைக் கோயில், கல் விகாரை, ஸ்தூபி மேடுகள், தாமரை குளம், தடாகங்கள்,
இந்து சிற்பங்கள் என்ற சோழர்கால நடராஜர் சிலை, காரைக்கால் அம்மையார், சோமஸ்கந்தர், வீஷ்ணு, விநாயகர் சிலை போன்றவை காட்சிபடுத்துப்பட்டுள்ளன.
இவையெல்லாம் பெரும் நிலபரப்பில் விஜயபாகு, பராக்கிரம
பாகு (கி.பி.1153-1186) ஆகிய மன்னர்களாலும், நிசங்க மன்னன் (கி.பி.1186-1196) காலத்திலும் கட்டியதாக
கூறப்படுகிறது. இந்நகரம் முழுவதும் இடிந்த நிலையில் செங்கற்களால்
கட்டபட்ட பல கட்டிடங்கள் பெரும் நிலபரப்பில் காணப்படுகின்றன.
இந்நகரத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டிய வானவன் மாதேவிசுவர கோயில் சிவ தேவலா
என்ற பெயரில் உள்ளது.
இந்த பழங்கால நகரை பார்த்த பின்பு இரவு மரத்தால் கட்டப்பட்ட Occidential Paradise என்ற சொகுசு விடுதியில் தங்கினோம்.


 |
இடிந்த 9 மாட அரண்மனை
|
 |
அரச சபை கூடும் இடம் |
 |
குமார வாவி என்ற அரச குளியல் குளம்
|
 |
சத்மஹல் பாய 7 அடுக்கு ஸ்தூபி |
 |
கற்புத்தகம் |
 |
வட்டதாகை |
 |
ராஜேந்திர சோழன்-1 கட்டிய சிவாலயம் |
 |
வேளக்காரப்படை கல்வெட்டு |
 |
புத்தர் கல்விகாரை |


06-05-2025 ஐந்தாம் நாள்
12. சிகிரியா மலை
இலங்கையின் மத்திய மாகாண மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள 1200 அடி உயரமுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலை. இலங்கை ஈழ வம்ச நூலின்படி தூதுசேனனின் மகன் காசியப்ப மன்னர் 4 ஆம் நூற்றாண்டில் (கி.பி.477-495) இம் மலைக் கோட்டையை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது,
கோட்டையை சுற்றி அகழியும் இருந்துள்ளது. மலையின் அடியில் மிக பெரிய அளவில் நகர நிர்மாணத்துடன் மூன்று பெரிய தோட்டங்கள், அரச கட்டிடங்கள், நீர் சேமிக்கும் குளங்கள் உள்ளன. இவற்றின் ஊடே பாறைகளின் மேல் கிரானைட் என்ற வெள்ளைப் பாறையால் செய்யப்பட்ட படிகட்டிகளின் மேல் ஏறி செல்ல வேண்டும். மலையின் பாதி உயரத்தில் சிங்கத்தின் கால் வடிவ கட்டுமானத்தின் நடுவே ஏறிச் செல்ல செங்குத்தான இரும்பு படிகட்டுகள் அமைத்துள்ளனர். இதில் ஏற சற்று சிரம பட்டாலும் சிகரத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பெரிய அரண்மனை கட்டிட இடிபாடுகள், குளம் ஆகியவை உள்ளதை காணும் போது வியப்பாக உள்ளது. சிம்மகிரி-சிகிரியா என மருவி உள்ளது. மலையின் இரண்டாவது செங்குத்தான பாறையின் குகையில் அஜந்தா குகை ஓவியம் ஒத்தது போன்ற பெண் ஒவியங்கள் அழகுற வரையபட்டுள்ளது இன்றும் காணமுடிகிறது. இவ்வொவியங்களை காண மிக உயரமான குகை போன்ற இடத்தில் எப்படி சென்று வரைந்தார்கள் என்பதை நினைத்தால் வியப்பாகவே உள்ளது. இன்று அந்த ஒவியங்களை காண இரும்பு சுழல் வடிவ படிகட்டுகள் அமைத்துள்ளனர். 13 நூற்றாண்டு வரை புத்த சமயம் இப்பகுதியில் நீடித்து பின்னர் மறைந்து போய் 19 நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் மீட்டெடுக்கப்பட்டு இப்போது பரமாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வொவியங்களின் கீழே நீண்ட சுண்ணாம்பு சுவர் பளபளக்கும் வகையில் மிக வழவழப்பாக கட்டப்பட்டுள்ளதை கண்ணாடி சுவர் என கூறுகின்றனர்.

 |
சிகிரியா மலைக்கோட்டை அகழி |
 |
எண்கோண பொய்கை |
 |
மலை உச்சியில் உள்ள மாளிகை கட்டுமானம் |
 |
மலை மேல் உள்ள வாவி |
 |
கல் இருக்கை |
 |
4 ஆம் நூற்றாண்டு ஓவியம் பாரக்க செல்லும் சுழல் படிகட்டு
|
 |
நாக வடிவ பாறை |
 |
1898 பெல் ஓவிய குகைக்கு செல்லுதல் |
 |
சிகிரியாவில் கிடைத்த பண்டைய விவசாய உபகரணங்கள் |
 |
4 ஆம் நூற்றாண்டு சிகிரியா ஓவியம் |
13. இதன் பின் பிற்பகல் உணவிற்கு பின் மினரியா தேசிய பூங்கா காட்டு யானைகளை திறந்த வண்டிகளில் சென்று பார்வையிட்டோம். யானைகள் தங்கள்குட்டிகளுடன் நீர் அருந்துவதும், உலா வருவதையும் கண்டு மகிழ்ந்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக