புதுச்சேரி மாவட்ட ஊரும் பேரும் என்ற ஊர் பெயர் ஆய்வு நூல் 2014 ஆண்டு முதல் பல தரவுகளை தேடத் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழித்து நவம்பர் மாதம் 2020 ஆண்டு வெளியிட்டேன். நான் சிறுவனாக இருக்கும் போது ஊர் பெயர்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது, பின்னர் அது வளர்ந்து கொண்டே இருந்ததால் அதனால் ஏற்பட்ட விளைவுதான் இந்த நூல். ஒரு ஆய்வாளன் போல் இந்த நூல் இருக்குமா என்பது தெரியாது. அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த போது இரவிலும், வார இறுதி நாட்களிலும், ஒய்வு நேரத்திலும் செய்தது. ஏதோ தெரிந்ததை, திரட்டியதை வைத்து வெளியிட்டேன்.
இதில் பலர் உதவி செய்தனர், பல ஆய்வுத் தரவுகள் திரட்டினேன்.
நூலில் உள்ள சில முக்கிய தகவல்களை பகிர்கிறேன்.
புதுச்சேரியின் மாவட்ட ஊர் பெயர் உருவான வரலாற்றை சுருக்கமாகவும், புதுச்சேரி மாநிலம் மற்றும் புதுச்சேரி மாவட்ட வரைபடமும், குறிப்பாக புதுச்சேரி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் என்ற நான்கு பகுதிகளாக புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாட்டிலும், மாகே கேரளாவிலும், யானம் ஆந்திர பிரதேசத்திலும் உள்ளதை வரைபடங்கள் மற்றும் புதுச்சேரி கிழிந்த கந்தல் துணி போல் அங்காங்கு ஓட்டை உள்ளதை போல் தமிழ்நாட்டின் விழுப்பரம், கடலூர் மாவட்டத்தை ஒட்டி உள்ளதையும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஊர் பெயர் உருவான வரலாற்றில், அதுவும் குறிப்பாக பிரெஞ்சியர் காலத்தில் ஒரு பிரெஞ்சு படை வீரரின் சிறிய எழுத்துப் பிழையால் புதுச்சேரி - பாண்டிச்சேரி என மாறி பின்னர் 13-06-2006 முதல் மீண்டும் புதுச்சேரி என மாற்றப்பட்டதையும் விளக்கபட்டுள்ளது.
புதுச்சேரியின் பழமையான ஊர் பெயர்களின் வரலாறு, பிரெஞ்சியர் ஆட்சி செய்த போது அவர்கள் பெயர் வைத்து உருவாக்கிய ஊர்ப் பெயர்கள், எ.கு. இலாசுப்பேட்டை, திப்புராயபேட்டை, கோலாஸ் நகர், திலாசுப்பேட்டை, அரும்பார்த்தபுரம், செயிண்ட்பால் பேட் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்பெயர்களின் பொதுக் கூறுகள், ஊர்களின் பெயர் காரணமும், சுருக்க வரலாறு, பின்ணைப்புகளாக, ஊர்களின் பட்டியலில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊர்கள், வருவாய் கிராம ஊர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக